சென்னையை பயமுறுத்திய மிக்ஜாம் புயல் இன்று ஆந்திராவில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே திருப்பதி மலையில் உள்ள பாஞ்சஜன்யம் விருந்தினர் மாளிகை அருகே சூறைக்காற்று காரணமாக பழமையான மரம் முறிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள் சேதமடைந்தன. இதில், யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் பக்தர்கள், பொதுமக்கள் யாரும் மரத்தின் கீழ் நிற்க வேண்டாம் என்றும், பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறும் திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. மரத்தின் கீழ் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.