திருச்சி புறநகர் மற்றும் மாநகர பகுதிகளில் நேற்று( மே 17) இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. துறையூர் பகுதியிலும் இடி, மின்னல் சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதில் துறையூர் அருகே கோணப்பாதை கிராமத்தில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவில் கோபுரம் மீது இடி விழுந்ததில் கோவில் கோபுரம் சேதமடைந்தது. கோபுரத்தில் இருந்த 3 சுவாமி சிலைகள் உடைந்து கீழே விழுந்தன. மற்றொரு சுவாமி சிலையின் தலை மட்டும் உடைந்த நிலையில் காணப்பட்டது. இந்த திருக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு தான் நடைபெற்றது. துறையூர் அருகே இடி விழுந்ததில் கோவில் கோபுரம் சேதமடைந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments are closed.