Rock Fort Times
Online News

கட்சியை கைப்பற்ற பம்மாத்து வேலைகளை செய்கிறார்- அன்புமணி மீது டாக்டர் ராமதாஸ் கடும் தாக்கு…!

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் பாமகவின் நிர்வாகக்குழு கூட்டம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் இன்று( டிச.17) நடைபெற்றது. இதில் அன்புமணிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் வெறும் அன்புமணி மட்டும்தான். எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. கட்சியின் பெயரையும், சின்னத்தையும் பயன்படுத்தக் கூடாது என அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை எல்லாம் அன்புமணி தொடர்ந்து செய்து வருகிறார். ஆயிரக்கணக்கான பொய் மூட்டைகளை ஊடகங்களுக்கு கொடுக்கிறார். தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சியதைப் போல் பாமக என்னும் மரத்தின் கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்