திறக்கப்பட்ட பேருந்து நிலையம் எங்கேயாவது மூடி கிடப்பதை பார்த்திருக்கிறீர்களா? * திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கேள்வி!
மக்கள் நலனில் அக்கறை செலுத்தாத திமுக அரசை கண்டித்தும், பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களையவும், மாரிஸ் மற்றும் ஜங்ஷன் ரெயில்வே மேம்பால பணிகளை விரைந்து முடிக்கவும், பாலக்கரையில் இருந்து பீமநகரை இணைக்கும் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சாலைகளை உடனடியாக சீரமைக்கவும், பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க கோரியும் திருச்சி மரக்கடை எம்ஜிஆர் திடலில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று( ஜூலை 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார். அதன்படி இன்று திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் சி.விஜயபாஸ்கர் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில்,
திருமணத்தை பிரமாண்டமாக செய்து விட்டு குடும்பம் நடத்தாதது போல் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து விட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கருத்துரு கொடுத்து பேருந்து நிலையம் வடிவமைக்கப்பட இருந்தது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் திமுக ஆட்சியில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஆனாலும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது. எங்காவது திறக்கப்பட்ட பேருந்து நிலையம் மூடப்பட்டு கிடப்பதை பார்த்து இருக்கிறீர்களா? ஆறு மாத காலத்திற்கு பின் பேருந்து நிலையம் திறக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அதிமுக ஆட்சி வந்து விடும் என்கிற பயத்தில் அவசர அவசரமாக பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருச்சி மாவட்டத்தில் தான் அதிகளவு சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிர் இழப்புகள் அதிகரித்துள்ளன. இதற்கு குண்டும்- குழியுமாக உள்ள சாலைகள் தான் காரணம். திருச்சி நகரப் பகுதியில் எந்த சாலையும் தரமானதாக இல்லை. இதற்கெல்லாம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் முடிவு கட்டுவார்கள். திருபுவனம் இளைஞர் அஜித் குமார் போலீசாரால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக ஆட்சியில் காவல்துறை போலி எஃப்.ஐ.ஆரை பதிவு செய்துள்ளது. சாரி என என கூறிவிட்டால் போன உயிர் திரும்பி வந்து விடுமா என எல்லோரும் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.
கலந்து கொண்டவர்கள்;
ஆர்ப்பாட்டத்தில் அமைப்பு செயலாளர் ரத்தினவேல், ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர்கள் அரவிந்தன், ஜோதிவாணன், நிர்வாகிகள் ஜெ. பேரவை என்ஜினியர் கார்த்திகேயன், அய்யப்பன், ஜாக்குலின், வனிதா, பத்மநாதன், ரஜினிகாந்த், கவுன்சிலர் கோ.கு. அம்பிகாபதி, ஏடிபி ராஜேந்திரன், வெங்கட்பிரபு, பாலாஜி, ஜான்எட்வர்டு, அப்பாஸ், பாசறை லோகநாதன், ஞானசேகர், சகாபுதீன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், கலீல் ரஹ்மான், என்.எஸ்.பூபதி, புத்தூர் ராஜேந்திரன் , எம்.ஆர்.ஆர். முஸ்தபா, ஏர்போர்ட் விஜி , ரோஜர், கலைவாணன், வாசுதேவன் மற்றும் நிர்வாகிகள் சிந்தாமணி முத்துக்குமார் இன்ஜினியர் இப்ராம்ஷா, ஜெயலலிதா பேரவை பொன்னர், கருமண்டபம் சுரேந்தர், இளைஞரணி சில்வர் சதீஷ்குமார், கலைப்பிரிவு உறையூர் சாதிக் அலி, எனர்ஜி அப்துல்ரகுமான், வக்கீல்கள் முத்துமாரி, முல்லை சுரேஷ், வரகனேரி சசிகுமார் தினேஷ்பாபு, கங்கைமணி, சுரேஷ், ஜெயராமன், கௌசல்யா, பாலக்கரை ரவீந்திரன், வாழைக்காய் மண்டி சுரேஷ், டிபன் கடை கார்த்திகேயன், பேராசிரியர் தமிழரசன், அக்பர் அலி, கீழக்கரை முஸ்தபா, ரமணி லால், உறந்தை மணிமொழியன், ஜெகதீசன், தர்கா காஜா, சாத்தனூர் செல்வராஜ், அப்பாகுட்டி, சரவணன், இலியாஸ், உடையான்பட்டி செல்வம், என்ஜினியர் ரமேஷ், நாட்ஸ் சொக்கலிங்கம், விநாயகமூர்த்தி, ஒத்தக்கடை மகேந்திரன், மணிகண்டன், குருமூர்த்தி, சரவணன், கே.டி. அன்புரோஸ், கே.டி.ஏ.ஆனந்தராஜ்,கதிர்வேல், எடத்தெரு பாபு, கேபி.ராமநாதன், பொன். அகிலாண்டம், ஐ.டி.நாகராஜ், கருமண்டபம் பெருமாள், ஜெயகுமார், ராஜ்மோகன், சிந்தமாணி மகாதேவன், ஈஸ்வரன், தென்னூர் ஷாஜகான், கிராப்பட்டி கமலஹாசன், எ.புதூர் வசந்தகுமார், வசந்தம் செல்வமணி, கயிலை கோபி, செல்லப்பன், மணிகண்டன், பாலசுப்பிரமணியன், கல்லுக்குழி அக்பர்அலி, கீழக்கரை முஸ்தபா, கோழிக்கடை பாலு, சாத்தனூர் சதிஷ், வாழைக்காய் மண்டி சுரேஷ், கல்லுக்குழி முருகன், குருமூர்த்தி, முகமது யூசுப், சண்முகம், காசிப்பாளையம் சுரேஷ்குமார், என்டி.மலையப்பன், பூக்கடை முத்துகுமார், புத்தூர் பாலு, டைமன் தாமோதரன், உறந்தை மணிமொழியன், ராமலிங்கம், ரபீக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.