அதிமுக ஆட்சியில் டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் மூலம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டது மறந்து போய்விட்டதா?* முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி…!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று (22.01.2026), ஆசிரியர்கள் போராட்டம் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.தங்கமணி எழுப்பிய கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது அவர், அரசு ஊழியர்களின் போராட்டத்தை திமுக அரசு உரிமையாகக் கருதுவதாகவும், அமைச்சர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி 95-96 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் டெஸ்மா, எஸ்மா சட்டங்கள் கொண்டு வரப்பட்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை நினைவூட்டிய முதல்வர், தற்போதைய ஆட்சியில் அத்தகைய நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என்றார். மேலும், 23 ஆண்டுகளாக நீடித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறினார். அடுத்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியே என உறுதிபட தெரிவித்தார்.

Comments are closed.