Rock Fort Times
Online News

“தந்தையாக மட்டுமல்ல தலைவர் என்பதாலும் மகிழ்ச்சி”…- உதயநிதிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிடப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில், “கொள்கைப் பற்றோடு உழைப்பிலும் உயர்ந்து வரும் உதயநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். இளைஞரணி செயலாளராகவும், விளையாட்டுத்துறை அமைச்சராகவும், துணை முதலமைச்சராகவும் நீ ஆற்றிவரும் பணிகளை மக்கள் மற்றும் கழகத்தினர் பாராட்டிச் சொல்வதைக் கேட்கும்போது, தந்தையாக மட்டுமல்ல தலைவர் என்பதாலும் மகிழ்ச்சி அடைகிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைத் தொண்டனாக நான் உனக்கு அறிவுறுத்துவது: காட்சிக்கு எளியனாக, கடுஞ்சொல் சொல்லாதவனாக, மக்களின் அன்புக்குரியவராக, எப்போதும் அவர்களுக்காகக் களத்தில் நிற்பவனாக நீ திகழ வேண்டும். இளைஞர்களிடம் திராவிட இயக்கக் கருத்தியலை தொடர்ந்து விதைத்து, அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் விதத்தில் நீ செயலாற்ற வேண்டும்.” இவ்வாறு முதலமைச்சர் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்