திருச்சியில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், பா.ஜ.க.வால் பெரியாரை நேரடியாக விமர்சனம் செய்ய முடியாத காரணத்தால் அவர்கள் சீமானை பயன்படுத்தி பெரியாரை விமர்சனம் செய்தார்கள்.சீமானும் அதற்கு பயன்பட்டார். ஆரம்பத்தில் பெரியார் குறித்த சீமானின் விமர்சனத்திற்கு ஆதரவு தெரிவித்த அண்ணாமலை தற்போது சீமான் ஓவராக பேசி விட்டார் என்கிறார். சீமானை போலவே அண்ணாமலையும் மாற்றி மாற்றி பேச கூடியவர் தான். டெல்லி தேர்தலிலிருந்து இந்தியா கூட்டணி கட்சிகள் படிப்பினை பெற்று கொள்ள வேண்டும். மதவாதத்தை வீழ்த்த தமிழ்நாட்டில் கூட்டணிகள் உறுதியாக இருப்பது போல் இருந்திருந்தால் டெல்லியிலும் பா.ஜ.க.வை வீழ்த்தியிருக்கலாம். டெல்லியில் பா.ஜ.க.பெற்றுள்ள வெற்றி தற்காலிக வெற்றி தான் என்று கூறினார்.பேட்டியின்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் சுரேஷ், மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் செல்வராஜ், மாநகரச் செயலாளர் சிவா மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Comments are closed.