திருச்சி, புறநகர் பகுதியில் மூட்டை, மூட்டையாக கடத்தி வரப்பட்ட குட்கா, கார் பறிமுதல்: டிரைவர் ஓட்டம்… !
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே நாமக்கல் செல்லும் புறவழிச்சாலையில் சொரத்தூர் பகுதியில் துறையூர் காவல் ஆய்வாளர் முத்தையன் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்த போலீசார் சைகை காட்டினர். போலீசாரை பார்த்ததும் காரை நிறுத்திவிட்டு அதன் டிரைவர் கீழே குதித்து தப்பி ஓடிவிட்டார். பின்னர், அந்த காரில் போலீசார் சோதனையிட்ட போது அதில் மூட்டை, மூட்டையாக குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும். அதனைத் தொடர்ந்து அந்த புகையிலைப் பொருட்கள் மற்றும் காரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
Comments are closed.