திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் ரோட்டோர பகுதிகளில் பழங்குடியின நரிக்குறவ இனப்பெண்கள் கடந்த இரண்டு தலைமுறைகளாக ஊசி, பாசி விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு வாரமாக இவர்கள் பொருட்களை தடிகள் கொண்டு தள்ளிவிட்டு இங்கு விற்பனை செய்யக்கூடாது என மாநகராட்சி ஊழியர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி உதவி ஆணையரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து சிஐடியு தரைக்கடை தள்ளுவண்டி சங்கம் தலைமையில் பழங்குடியின நரிக்குறவ இனப் பெண்கள், மாநகராட்சி அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தரக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி தலைமை வகித்தார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட துணை தலைவர் மாறன், தரைக்கடை சங்க மாவட்ட தலைவர் கணேசன், ஆட்டோ சங்கம் மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பேசினர். இதில் ஏராளமான நரிக்குறவ பெண்கள் கலந்து கொண்டு மாநகராட்சி மேயரிடம் மனு கொடுத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.