தமிழகத்தில் உள்ள மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கட்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்நாளில் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து பயன்பெறுவார்கள். ஆனால், தமிழகத்திற்கு சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியரகங்களில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டங்கள் நடைபெறாது என்றும், ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் ராட்சத பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தி விட்டு செல்லுமாறும், அந்த மனுக்கள் மீது வழக்கம்போல நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள மனுக்கள் பெட்டியில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தினர்.

Comments are closed.