திருச்சி மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த கோட்ட அலுவலகங்களில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கீழ்க்கண்ட தேதிகளில் நடத்தப்படுகிறது. அதன்படி, துறையூர் கோட்டத்தில் வருகிற 5-ந் தேதி , ஸ்ரீரங்கம் கோட்டத்தில் 8-ந் தேதி, லால்குடி கோட்டத்தில் 12- ந் தேதி, திருச்சி கிழக்கு கோட்டத்தில் 15-ந் தேதி, திருச்சி நகரிய கோட்டத்தில் 19-ந் தேதி, மணப்பாறை கோட்டத்தில் 26-ந் தேதி குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. இந்த நாட்களில் அந்தந்த கோட்டத்துக்குட்பட்ட மின்நுகர்வோர் தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து பயன் பெறலாம் என மின்வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.