ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடி, காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் காலி மணி. இவர் இன்று (15.09.2025) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சியில் இருந்து மஸ்கட் செல்ல இருந்தார். அவரது உடைமைகளை சி.ஐ.எஸ்.எப். போலீசார் சோதனை செய்தபோது அதில் ஜிபிஎஸ் ட்ராக்கர் என்ற கருவி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில், மீன்பிடி தொழில் செய்து வருவதால் மீன்பிடி தொழிலுக்கு பயன்படுத்தும் ட்ராக்கர் என்று கூறினார். இதுதொடர்பாக சி.ஐ.எஸ்.எப்.போலீசார் திருச்சி பன்னாட்டு விமான காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் விசாரணை செய்து வருகின்றனர்.
Comments are closed.