தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகைக்கு இன்று (மார்ச் 07) சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். மேற்கு வங்க மாநில ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. சந்திப்பின்போது தமிழ்நாட்டிற்கு சேவையாற்றிய ஆளுநர்.ஆர்.என். ரவியை முதலமைச்சர் பாராட்டியதாகவும், தமிழ்நாடு அரசு சார்பில் நினைவுப் பரிசு வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Comments are closed.