ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை… * முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…!
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.17) காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை 11.05 மணிக்கு வருகை தந்தார். அவருடன் அமைச்சர்கள் பி.மூர்த்தி, கே.என்.நேரு, பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எம்பிக்கள் சு.வெங்கடேசன், தங்கத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் பங்கேற்றனர். பின்பு ஜல்லிக்கட்டு போட்டிகளை ஆர்வமுடன் பார்வையிட்டனர். தொடர்ந்து, சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் அரசு வேலை வழங்கப்படும். அலங்காநல்லூரில் ரூ.2 கோடியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான பயிற்சி மற்றும் உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என 2 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் அறிவித்தார்.

Comments are closed.