திருச்சி ராம்ஜிநகர் ஹரிபாஸ்கர் காலனியைச் சேர்ந்தவர் கோபிநாதன். இவரது மனைவி கோமதி (வயது 52). இவர் சமீபத்தில் கஞ்சா கடத்திய வழக்கில் ராம்ஜி நகர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் போலீசார் அவரை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப் குமார், கஞ்சா வழக்கில் கைதான கோமதியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.
