Rock Fort Times
Online News

மகளிர் உரிமைத் தொகை கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு ‘குட் நியூஸ்’ வந்தாச்சு…!

தமிழ்நாடு அரசு சார்பில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான பெண்கள் பயன் பெற்று வருகின்றனர். ஆனால், பல்வேறு காரணங்களால் பல பெண்களுக்கு இந்த உரிமை தொகை கிடைக்கவில்லை. அவர்களையும் இந்தத் திட்டத்தின் கீழ் சேர்க்க அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்கள், ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பங்கேற்று மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது. அந்தவகையில் மகளிர் உரிமைத் தொகை கோரி 28 லட்சம் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் தகுதியானவர்களுக்கு, டிசம்பர் மாதம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். அதன்படி, தகுதியான பயனாளிகளை இறுதி செய்யும் பணிகளில், வருவாய் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் வருமான வரி செலுத்தும் குடும்பத்தினரை தவிர்த்து, மற்ற குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க, தமிழக நிதித்துறை ஒப்புதல் வழங்கி உள்ளது. எனவே, புதிய பயனாளிகளுக்கு, டிசம்பரில் மகளிர் உரிமைத் தொகை வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்