ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்தை தீபாவளி போனஸாக வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அக்.,2ம் தேதி தசராவும், அக்., 20ம் தேதி தீபாவளி பண்டிகையும் கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் இன்று(24-09-2025) அமைச்சரவைக் கூட்டம் கூடியது. அதில், ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், ரூ.1,865 கோடி செலவினம் ஏற்படும். இதன்மூலம் தண்டவாள பராமரிப்பாளர், லோகோ பைலட்கள், ரயில்வே மேலாளர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், சூப்பர்வைசர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் உள்பட மொத்தம் 11 லட்சம் பேர் பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.