Rock Fort Times
Online News

அரசு ஊழியர்கள், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குட் நியூஸ்: 6 நாட்கள் தொடர் விடுமுறை அளித்தது தமிழ்நாடு அரசு…!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு 6 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 14-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் 15-ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினமாகும். 16-ம் தேதி வியாழக்கிழமை உழவர் திருநாள். இந்த 3 நாட்களும் அரசு விடுமுறை நாட்கள் ஆகும். இடையில் 17ம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அதற்கு அடுத்து 18-ம் தேதி, மற்றும் 19ஆம் தேதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இடைப்பட்ட நாளான வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டால் தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனை கருத்தில் கொண்ட தமிழ்நாடு அரசு, அவரவர் சொந்த ஊரில் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடும் வகையில் தற்போது 17-ம் தேதி வெள்ளிக்கிழமையும் விடுமுறை நாளாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக 14-ம் தேதி முதல் 19ம் தேதி வரை 6 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. இந்த நாட்களில் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. 20ம் தேதி திங்கட்கிழமை வழக்கம்போல செயல்படும். 14-ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 25-ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்