திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து திருச்சிக்கு ஸ்ரீலங்கன் விமானம் நேற்று ( 01.11.2023 ) வந்தது. விமானத்தில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை செய்தனர். அப்போது, பயணிகள் 3 பேர் பசை வடிவிலான 1,833 கிராம் தங்கத்தை, கேப்சூல்களில் அடைத்து உடலுக்குள் வைத்து மறைத்து கடத்தி வந்தது கண்டிறியப்பட்டது. மூவரும் ஜோர்டான் நாட்டிலிருந்து இலங்கை வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் வந்து அங்கிருந்து திருச்சிக்கு வந்த விமானத்தில் வந்துள்ளனர். இதனையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாாிகள், 3 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் அவா்கள் 3 போ் கடத்திய தங்கத்தின் மதிப்பு ரூ.1.09 கோடி என அதிகாாிகள் தொிவித்துள்ளனா்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.