தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு மற்றும் ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக தங்கம் விலை அதிகரிப்பதும், இறங்குவதுமாக இருந்து வருகிறது. அந்தவகையில் இன்று (ஆகஸ்ட் 5) சென்னையில் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை நெருங்குகிறது. தமிழகத்தில் கடந்த ஜூலை 23ம் தேதி தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது. அன்று ஒரு சவரன் தங்கம் வரலாற்றில் முதல் முறையாக ரூ.75,040க்கு விற்பனையானது. அதன்பிறகு மறுநாளில் இருந்தே தங்கம் விலை குறைய தொடங்கியது. தற்போது மீண்டும் உயர தொடங்கி உள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு சவரன் ரூ.74,360க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு ரூ.5 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9,295க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.75 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,370க்கு விற்பனை ஆகிறது. மீண்டும் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.75 ஆயிரத்தை நெருங்கியதால் இல்லத்தரசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இப்படியே தங்கத்தின் விலை அதிகரித்தால் அது ஏழைகளுக்கு எட்டா கனியாகவே இருக்கும் என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.
Comments are closed.