திருச்சி மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர். அந்தவகையில் விபச்சார கும்பல் ஒன்றை போலீசார் கைது செய்துள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி, ஸ்ரீரங்கம் பஞ்சகரை ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் மல்லிகா (44). இவர் அதே பகுதியில் ஒரு கட்டிடத்தில் சில பெண்களை தங்க வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து மல்லிகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அந்த கும்பலிடம் இருந்து 5 செல்போன்கள், ரூ.2000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல, திருச்சி- மதுரை சாலை நத்தர்ஷா பள்ளிவாசல் தெருவை சேர்ந்த வாசிம் அக்ரம் (30) என்பவர் சீனிவாச நகர் பகுதியில் சில பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிந்து வாசிம் அக்ரமை கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 39 வயது பெண் மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
Comments are closed.