Rock Fort Times
Online News

திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டதற்கு பணம் கேட்ட ஊழியர்களை தாக்கிய கும்பல்… * சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு போலீசார் விசாரணை (வீடியோ இணைப்பு)

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ராமசாமி (47) என்பவர் ஹோட்டல் நடத்தி வருகிறார். இங்கு காந்தி மார்க்கெட்டில் பணிபுரியும் லோடுமேன்கள், வியாபாரிகள், வேன் டிரைவர்கள், வாடிக்கையாளர்கள் பலரும் உணவருந்தி செல்வது வழக்கம். நேற்று (28.4.2025) நள்ளிரவில் அந்த கடைக்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் உணவருந்தினர். சப்ளையர்கள் குணா மற்றும் சித்ரவேல் அவர்களிடம் சாப்பிட்ட உணவுக்கு பணம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் பில் தொகையை கட்ட மறுத்து பல்வேறு குறைகளை கூறியதுடன் ஒரு கட்டத்தில் சித்ரவேல், குணா இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்டமாக ஹோட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு அவர்கள் யார் என்று விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்