கடந்த 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் வீடுகளிலும், போலீசார் அனுமதித்த இடங்களிலும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. திருச்சி மாநகாில் வைக்கப்பட்ட 290 விநாயகா் சிலைகள் உள்பட மாவட்டம் முழுவதும் வைக்கப்பட்ட 1500 சிலைகள் இன்று ( 20.09.2023 ) ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி ஆறு மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்படுகின்றன. இதற்காக காவிரி கரையில் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவசர உதவிக்கு மருத்துவ முகாம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என்.காமினி ஐபிஎஸ் தலைமையில் கூடுதல் துணை கமிஷனர், 3 துணை கமிஷனர்கள், 9 உதவி கமிஷனர்கள், 37 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர்கள் என 1850 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஊர்வலத்தின்போது முக்கிய சாலை சந்திப்புகள் மற்றும் பிரச்சனைகுரிய இடங்கள் ஆகியவை கண்டறியப்பட்டு அவ்விடங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி திருச்சி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.