மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கட்சி கட்டமைப்பை விரிவுபடுத்தி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் புதிதாக 26 நிர்வாகிகளை நியமனம் செய்து அதற்கான பட்டியலை வெளியிட்டுள்ளார். அதன்படி, திருச்சி கிழக்கு மாவட்ட ம.நீ.ம. துணை செயலாளராக பதவி வகித்து வந்த ஜி.சதீஷ்குமார் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு திருச்சி மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதோடு இணைந்து செயலாற்றுமாறு கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Comments are closed.