Rock Fort Times
Online News

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், சீருடைகள்…* திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி வழங்கினார்

தமிழ்நாடு அரசு, ஆண்டுதோறும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள்,  சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், புத்தகப் பைகள், காலணிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டும் மாணவ, மாணவிகளுக்கு மேற்கண்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. திருச்சி செந்தண்ணீர்புரத்தில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 2025-26-ம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி வழங்கினார். நிகழ்ச்சியில் 35-வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுரேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்