தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் இனி ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை உடற் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்க ” நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” என்கிற புதிய திட்டம் தமிழக அரசின் சார்பில் நாளை முதல் துவங்கப்பட உள்ளது. இம் முகாம்களில் மருத்துவ சேவைகள், அலோபதி மற்றும் ஆயுர்வேத மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள், சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மூலம் வழங்கப்பட உள்ளன. இம்மாம்களில் 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனநல பாதிப்புடையோர், இதய நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக – பொருளாதார ரீதியில் பின் தங்கிய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இம்மகங்களில் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்து பயனாளிகளுக்கும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை, ரத்த சர்க்கரை, சிறுநீரக செயல்பாடு பரிசோதனைகள் செய்யப்பட்டு மருத்துவ முகாமிலேயே பயனாளிகளின் பரிசோதனை விவரங்கள் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் உடனடியாக தெரிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது
Comments are closed.