Rock Fort Times
Online News

திருச்சி, சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 29 ஜோடிகளுக்கு இலவச திருமணம்- பெரம்பலூர் எம்பி கே.என். அருண்நேரு நடத்தி வைத்தார்…!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு திருக்கோவில்கள் சார்பாக 4 கிராம் பொன்தாலி உட்பட ரூ.60 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது.  அந்தவகையில் இன்று(21-10-2024) திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் திருச்சி இணை ஆணையர் மண்டலத்திற்குட்டபட்ட (திருச்சி மற்றும் பெரம்பலூர்) 29  ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.  இதில், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு, திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணங்களை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்கள்.  இந்த திருமண விழாவில், இந்து சமய அறநிலையத்துறை இயக்குனர்கள் கல்யாணி, பிரகாஷ், சமயபுரம் கோவில் அறங்காவலர் குழு தலைவர் வி.எஸ்.பி.இளங்கோவன், நகர செயலாளர் சி.பி.டி.ராஜசேகர்,  லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பியமணியன் மற்றும் மணமக்களின் உறவினர்கள், நண்பர்கள் திரளாக கலந்து கொண்டனர்.  திருமண விழாவை  ஒட்டி மணமக்களுக்கு 70 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்