திருச்சியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி…* அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் வழங்கினர்!
தமிழ்நாடு அரசு சார்பில், கல்லூரிகளில் படிக்கும் 10 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் திருச்சி, கலையரங்கில் இன்று (ஜன.27) நடைபெற்ற விழாவில், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினர். விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், முதல்வர் செயல்படுத்தி வரும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்தி, உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும் என வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் லி.மதுபாலன், மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் சல்மா, லால்குடி சட்டமன்ற உறுப்பினர் அ.சௌந்தரபாண்டியன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின்குமார், மாவட்ட நகர் ஊரமைப்பு குழு உறுப்பினர் வைரமணி மற்றும் மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பேராசிரியர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்று சிறப்பித்தனர்.

Comments are closed.