Rock Fort Times
Online News

போலி நகைகளை கொடுத்து பெண்ணிடம் ரூ.60 ஆயிரம் மோசடி…

திருச்சி மாவட்டம், துறையூர் கீழக்கடை வீதியில் கண் கண்ணாடி கடை நடத்தி வருபவர் சாரதாலட்சுமி. இவரது கடைக்கு சுமார் 40 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள், சுமார் 7 வயது சிறுமியுடன் வந்தனர். அவர்கள், சாரதாலட்சுமியை சந்தித்து நெடு ஞ்சாலைத்துறையில் சாலை பணியாளராக பணிபுரிந்து வருவதாகவும், உறவினர் ஒருவரின் மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுவதால் இந்த 8 பவுன் தாலிக் கொடியை வைத்துக்கொண்டு பணம் தருமாறு கேட்டுள்ளனர்.
அவர்கள் மீது பரிதாபப்பட்ட சாரதா லட்சுமி, அந்த நகையை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக் கொண்ட அந்த பெண்கள் கடையை விட்டு வேகமாக வெளியேறி உள்ளனர். இதனால் சாரதாலட்சுமிக்கு சந்தேகம் வரவே, நகைக்கடை ஒன்றில் பணிபுரியும் தன்னுடைய உறவினர் ஒருவரை வரவழைத்து நகையை பரிசோதித்ததில் அந்த நகைகள் போலியானது என தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், கடைவீதி முழுவதும் அலைந்து திரிந்து மர்மப் பெண்களை தேடி உள்ளார். ஆனாலும், அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசில் சாரதாலட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்