திருச்சி பால் பண்ணை 2 -வது கிராஸ் நகர் ராஜாளி அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சீதா மனோகரன் (வயது 52). ஆடிட்டர் .இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த குறும்பட நடிகர் மதியழகன் என்பவரின் மனைவி மாலதி (44) என்பவர் அணுகி, ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்தால் அதில் லாபம் கிடைக்கும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய சீதா மனோகரன், ஒரு கோடியே 88 லட்சத்தை மாலதியிடம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த பணத்திற்கு லாபம் எதையும் மாலதி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சீதா மனோகரன், திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் . புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து குறும்பட நடிகர் மதியழகன் மனைவி மாலதியை கைது செய்தார். மேலும் அவரது மகனும், ஆட்டோ டிரைவருமான நடராஜன், உறவினர் ஜெயக்குமார் ஆகிய 2 பேரை தேடி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.