திருச்சி வாசன் நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 34). இவர் அவசர தேவைக்காக தனது காரின் ஆர்.சி.புக்கை ரமேஷ் என்பவரிடம் அடமானமாக வைத்து ரூ.ஒன்றரை லட்சம் கடனாக பெற்றார். பின்னர் அதற்கு உண்டான வட்டியும் சேர்த்து ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் திருப்பி செலுத்தினார். பின்னர் ஆர்.சி புக்கை கேட்டபோது அவர் திரும்ப கொடுக்கவில்லை. பின்னர் விசாரித்த போது கிருபாகரனின் காரை முகிலன் என்பவருக்கு விற்று மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட கிருபாகரன், தில்லை நகர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ரமேஷ், முகிலன் ஆகிய இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.