திருச்சி முன்னாள் எம்.எல்.ஏ. பா.பரணிகுமார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி…* அமைச்சர்கள் கே.என்.நேரு காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு !
திருச்சி நகர்மன்ற முன்னாள் தலைவர் மா.பாலகிருஷ்ணன். இவரது மகன் பா.பரணிகுமார். இவர், திருச்சி 1-வது சட்டமன்ற தொகுதியில், கடந்த 1996 மற்றும் 2001 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரியவர். இந்நிலையில் பா.பரணிகுமார்- மகாலட்சுமி தம்பதியரின் மகன் டாக்டர் ஆதித்யா பாலா பரணி குமாருக்கும், சென்னை கே.மோகன்- சாந்தகுமாரி ஆகியோரது மகள் டாக்டர் எம்.மீனாட்சிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நாளை 28ம் தேதி (புதன்கிழமை) காலை 9-30 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் நடக்கிறது. தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்- அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைக்கிறார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள். இந்நிலையில் பா.பரணிகுமார் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இன்று(27-01-2026) நடைபெற்றது. இதில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என். நேரு, கைத்தறித்துறை அமைச்சர் ராணிப்பேட்டை காந்தி, திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே.வைரமணி, அந்தநல்லூர் ஒன்றிய சேர்மன் துரைராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Comments are closed.