திருச்சி மாநகராட்சி முன்னாள் மேயரும், 31- வது வார்டு மாமன்ற உறுப்பினருமான எஸ்.சுஜாதா காலமானார். மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. அவரது மறைவு காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து கட்சியினர் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.சுஜாதா, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.