காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி முன்னாள் எம்பி மறைந்த எல்.அடைக்கலராஜின் உடன் பிறந்த தம்பி எல்.பால்ராஜ் நேற்று (ஜூலை 27) காலமானார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக கூறப்படுகிறது. திருச்சி கிராப்பட்டி, அன்பு நகரில் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்கள், உறவினர்கள், தொழிலதிபர்கள் நண்பர்கள், அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக எல்.அடைக்கலராஜ் கொடிகட்டி பறந்த காலங்களில் கூட எந்தவித பகட்டும், பந்தாவும் இல்லாமல் எளிமையாக வாழ்ந்தவர் பால்ராஜ் என்று அவரது இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
Comments are closed.