Rock Fort Times
Online News

அதிமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் திருச்சி வெல்லமண்டி நடராஜனுக்கு அமைப்பு செயலாளர் பதவி…!

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜன், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டபோது அவருடன் சென்றார். தற்போது. ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்த நிலையில், வெல்லமண்டி நடராஜனும் அவருடன் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட நான் திமுகவில் போய் இணைய முடியாது என்று கூறிய அவர், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார். தற்போது, அவருக்கு அதிமுகவில் அமைப்பு செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்