வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய வேண்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தியானம்…!
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி முடிய இன்னும் 10 மாதங்களே உள்ளன. இதனால், அனைத்துக் கட்சிகளும் தற்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள திமுகவும், இழந்த ஆட்சியைப் பிடிக்க அதிமுகவும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் வருகிற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைய வேண்டியும், முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் வர கோரியும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி ஶ்ரீவில்லிப்புத்தூர் சரபேஸ்வரர் கோவிலில் நேற்று (ஜூன் 15) நள்ளிரவு பூஜை செய்து தியானம் செய்தார். ராஜேந்திர பாலாஜியின் இந்த திடீர் பூஜை, தியானம் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Comments are closed.