கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு: சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்
பாலியல் புகாரில் பாஜக மூத்த தலைவரும் கர்நாடக முன்னாள் முதல்வருமான எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்.2ம் தேதி கல்வி விவகாரம் தொடர்பாக தாயுடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்ற போது, அறைக்குள் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. உதவி கேட்க சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக பெங்களூரு சதாசிவ நகர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. POCSO சட்டத்தின் பிரிவு 8 மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 A ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன
Comments are closed, but trackbacks and pingbacks are open.