தமிழக முன்னாள் ஆளுநர் எம். பாத்திமா பீவி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 96. கேரள மாநிலம் பத்தினம் திட்டாவை சேர்ந்தவா் பாத்திமா பீவி. பத்தினம்திட்டாவில் பள்ளிப்படிப்பை முடித்த இவர் , திருவனந்தபுரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டம் பெற்றவா். அரசு சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்று 1950 ஆம் ஆண்டு வழக்குரைஞராக பணியை தொடங்கினார். பின்னா் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வடைந்து 1983 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். பின்னா் 1989இல் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்திய உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமையையும், முதல் இஸ்லாமிய நீதிபதியாகவும் இருந்துள்ளார். தமிழகத்தின் 11வது ஆளுநராக கடந்த 1997 முதல் 2001 வரை பாத்திமா பீவி பதவி வகித்தார் என்பது குறிப்பிடதக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.