மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்…!
திமுக செய்தித் தொடர்பாளராக இருந்தவர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன். இவர் கட்சி கட்டுப்பாட்டை மீறி , கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி கடந்த 2022 அக்டோபர் மாதம் திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து அரசியலில் இருந்து விலகியிருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பின்னர் பாஜகவுடன் இணக்கமாக செயல்பட்டு வந்தார். இந்நிலையில், திமுக முன்னாள் நிர்வாகி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இன்று (ஆகஸ்ட் 22) பாஜகவில் இணைந்தார். நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்தார்.
Comments are closed.