அதிமுக முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இவர், கடந்த 2016ம் ஆண்டு பேரவைத் தேர்தலில் தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து 2021 பேரவைத் தேர்தலிலும் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால் தோல்வியை தழுவினார். இந்த நிலையில் சென்னையில் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து அக்கட்சியில் மனோகரன் இணைந்துள்ளார். வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தவெக சார்பில் வாசுதேவநல்லூர் தொகுதியில் மனோகரன் மீண்டும் களமிறக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

Comments are closed.