Rock Fort Times
Online News

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் திமுகவில் இணைந்தார்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில் அதிமுகவில் இருந்து விலகுவதாக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். நான் நீண்ட காலமாக கழகத்தில் பயணித்து வந்தேன். தற்சமயம் எனது சொந்த சூழ்நிலை காரணமாக கழகத்தில் தொடர்ந்து பணிபுரிய இயலவில்லை. எனவே, நான் எனது அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். எனது விலகல் கடிதத்தை தாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நிலோபர் கபில் திமுகவில் இணைந்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்