Rock Fort Times
Online News

அதிமுக முன்னாள் அமைச்சர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வரக்கூடும்…* சொல்கிறார் செங்கோட்டையன்…!

சென்னை விமான நிலையத்தில், தமிழக வெற்றிக் கழக நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தினால் பலருக்கு நன்மை நடந்து கொண்டிருக்கிறது. இதை அப்படி தான் பார்க்க வேண்டும். தமிழக வெற்றி கழகத்தினால் தான் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் சீட் கிடைத்துள்ளது. எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளை தலைவர் விஜய் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். அதிமுகவிலிருந்து பிரிந்து சென்ற சசிகலா, புகழேந்தி புதிய கட்சிகளை தொடங்கியுள்ளனர். புதிய கட்சியை தொடங்குவது அவரவர் விருப்பம். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது வேதனைக்குரிய ஒன்று. அனைத்து கட்சிகளும் இன்னும் கூட்டணிகளையே இறுதி செய்யவில்லை, ஆனால், எங்களிடம் மட்டும் ஏன் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதா என்று கேட்கிறீர்கள்?. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு அதிமுகவில் சீட் கிடைக்கப் போவதில்லை. அவர் வேண்டுமானால் எங்கள் கட்சிக்கு வரலாம். எதிர்கால தமிழகத்தை ஆளக்கூடியவர் தவெக தலைவர் தான் என்பதை இந்த நாடே அறிய இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்