திருச்சி சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் தலைவரும், அ.இ.அ.திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினரும், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளருமான சகாதேவ பாண்டியன் நேற்று இரவு திடீர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று விடியற்காலை சிகிச்சை பலனின்றி சகோதேவ பாண்டியன் உயிரிழந்தார். இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவரது உடல் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் எம்.பி.ப.குமார், முன்னாள் துணை மேயர் சீனிவாசன், முன்னாள் எம்.பி ரத்தினவேல் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் அவருக்கு அஞ்சலி செலுத்தினா் .
