Rock Fort Times
Online News

முதல்முறையாக தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை- முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்…!

தமிழ்நாட்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அந்த பொருளாதார ஆய்வறிக்கையில், வரும் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வளர்ச்சி 8 சதவீதமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் நாளை( மார்ச் 14) தாக்கல் செய்யப்பட விருக்கிறது. இந்தநிலையில், தமிழக அரசின் பொருளாதார ஆய்வறிக்கையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அந்த அறிக்கையில், வலுவான கொள்கையின் காரணமாக தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் உள்ளது. தமிழகத்தில், தனி நபர் வருமானம் ரூ.2.78 லட்சமாக அதிகரிக்கும். இது தேசிய சராசரியை விட 1.64 மடங்கு அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, மத்திய பட்ஜெட் தாக்கலின்போது தான் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்படும். மத்திய அரசின் நிதிநிலை எவ்வாறு உள்ளது என்பதை வெளிப்படுத்தும் வகையில் பொருளாதார ஆய்வறிக்கை அமைந்திருக்கும். ஆனால் தற்போது தமிழக அரசு முதல் முறையாக பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்