Rock Fort Times
Online News

இந்தியாவில் முதல்முறையாக சிறுமிகளுக்கு இலவசமாக HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம்…* முதல்வர்  மு.க.ஸ்டாலின்  தொடங்கி வைத்தார்..!

இந்தியாவில் முதல்முறையாக சிறுமிகளுக்கு இலவசமாக கருப்பை வாய் புற்றுநோய் (HPV) தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(27-01-2026) தொடங்கி வைத்தார். nதனியார் மருத்துவமனைகளில் இந்த ஊசிக்கு ரூ.28,000 செலவாகும் நிலையில் அரசு சார்பில் 14 வயதுக்கு உட்பட்ட 3.38 லட்சம் சிறுமிகளுக்கு இலவசமாக  இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இளம்பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு என்பது உலகளவில் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 லட்சம் பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் என்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. 14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்புகளை முன்கூட்டியே தடுப்பதற்கு HPV (Human papilloma Virus) தடுப்பூசியினை செலுத்துவதன் மூலம் இதனை தடுக்க இயலும் என்று உலக சுகாதார அமைப்புகள் கூறியுள்ளது. இதனால் இந்தியாவிலேயே முதன்முறையாக HPV தடுப்பூசி இலவசமாக வழங்கிட, சட்டமன்றத்தில் 2025 மார்ச் 14ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்