உலக கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவர் திருத்தந்தை போப் ஆண்டவர் பிரான்சிஸ் கடந்த 21 -ந் தேதி காலமானார். அவரது உடலுக்கு உலகத் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடல் நல்லடக்கம் இன்று (சனிக்கிழமை) வாடிகனில் நடக்கிறது. இந்தநிலையில் திருச்சி கிழக்கு மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் தலைமை தபால் நிலையம் அருகில் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் புஷ்பராஜ் தலைமை தாங்கி போப் பிரான்சிஸ் திருவுருவ படத்துக்கு
மலர் அஞ்சலி செலுத்தினார். மேலும் மாநில பொது செயலாளர் ஜான் பிரகாஷ் எபினேஷன், மாநில இளைஞரணி செயலாளர் அடைக்கலராஜா,
மண்டல செயலாளர் ஆண்ட்ரூஸ், மாநில செயற்குழு உறுப்பினர்கள் வின்சென்ட், பிரான்சிஸ், மாவட்ட அவைத்தலைவர் ஜேக்கப், பொருளாளர் ஞானப்பிரகாசம், செய்தி தொடர்பாளர் தன்ராஜ், மாவட்ட துணை அவைத்தலைவர்கள் வாசுகிஅமலா, டாக்டர் ஏனோக், போதகர் ஸ்டீபன்,
ஒருங்கிணைப்பாளர் அமிர்தராஜ், இளைஞரணி செயலாளர் ஜான் பிரகாஷ், மாவட்ட துணை செயலாளர்கள் லூயிஸ், ஜோஸ்வா ஜெயக்குமார், செல்வி, மாவட்ட ஆர்சி பொறுப்பாளர் ஹென்றி வளையாபதி, மாவட்ட டிஇஎல்சி பொறுப்பாளர் ஜான் பாஸ்கர், வழக்கறிஞர் அணி செயலாளர் தாமஸ், தொகுதி செயலாளர்கள் கனகராஜ், மைக்கேல் ஆல்பர்ட், பகுதி செயலாளர்கள் ஜான் போஸ்கோ, ஆல்பர்ட், தினகரன், ஜேம்ஸ், லூர்துராஜ், சேவியர் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மகளிரணி, இளைஞரணி, இயக்க நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Comments are closed.