திருச்சியில் இருந்து சென்னைக்கு 61 பயணிகளுடன் புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு…! 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது…! (வீடியோ இணைப்பு
திருச்சியிலிருந்து சென்னைக்கு இண்டிகோ விமானம் தினமும் காலை, மதியம், மாலை, இரவு என விமான சேவை வழங்கி வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை திருச்சியிலிருந்து 6 மணிக்கு சென்னைக்கு செல்ல விருந்த விமானம் புறப்பட தயாரான போது அதில் தொழில்நுட்ப கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்தார். அதனை தொடர்ந்து விமானம் திருச்சி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு அதிலிருந்து பயணிகள் விமான நிலைய காத்திருப்பு அறையில் தங்க வைக்கப்பட்டனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறை தொழில்நுட்ப வல்லுநர்கள் சரி செய்தனர். அதன் பின் இரவு 8-15 மணியளவில் அந்த விமானம் 61 பயணிகளுடன் சென்னைக்கு புறப்பட்டு சென்றது.
*
Comments are closed.