Rock Fort Times
Online News

வரும் 15-ம் தேதி முதல் மீன்பிடி தடைக்காலம்; நிவாரண நிதியை உயர்த்த மீனவர்கள் கோரிக்கை!

மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலில் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் வகையில் தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆழ்கடலில் மீன்பிடிக்க 61நாட்கள் தடை விதிக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் வரும் 15-ம் தேதி தொடங்கி ஜுன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு அமலில் இருக்கும். அதுவரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்குதளங்களில் நங்கூரமிடப்பட்டு இருக்கும். எந்த விசைப் படகுகளும் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாது. இந்த தடை காலத்தில் மீனவர்கள் தங்களது படகுகள், மீன் பிடி உபகரணங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்கிடையே, மீன்பிடித் தடைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்