திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியில் R.1372 லால்குடி வட்ட உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்கத்தில் சுமார் 100 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் .இவர்களது முழுநேரத் தொழில் மீன்பிடித்து விற்பனை செய்து வருவதுதான். இவர்கள் இதற்கு முன் வாளாடி கிராமம் நிர்வாக அலுவலகத்திற்கு கிழக்கும் ,வாளாடி மேற்கிலும் சுமார் 40 ஆண்டுகள் ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி அருகே மீன் விற்பனை செய்து வந்தார்கள். கொரோனா காலத்திற்கு பின் மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிந்துரையின் பேரில் லால்குடி ஆா்.டி.வோ, தாசில்தார் , ஊராட்சி மன்ற தலைவர் மூலமாகவும் வாளாடி சிவன் கோவில் மேற்குப் பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்து மீன் விற்பனை செய்து கொள்ள வழி செய்து கொடுத்தனர். தற்சமயம் நெடுஞ்சாலை துறை அந்த இடத்தில மீன் விற்பனை செய்ய கூடாது என்று மீன் விற்பனை செய்து வந்த இடத்தினை ஜே.சி.பி மூலம் குழிபறித்து மீன் விற்பனை செய்ய முடியாமல் செய்து விட்டனர் .ஆகையால் R.1372 லால்குடி உள்நாட்டு மீனவர் கூட்டுறவு சங்க வாளாடி பகுதி மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனால் நாங்கள் மீண்டும் மீன் பிடித்தொழில் செய்து மீன் விற்பனை செய்ய இடம் தேர்வு செய்து தருமாறு மீன் வியாபாரம் செய்து வரும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.