Rock Fort Times
Online News

முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்: 36 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தி நியூசிலாந்து வீரர்கள் அசத்தல்…!

இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்தது. மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்சில் 46 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’ ஆனது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 402 ரன்கள் குவித்தது.  இதையடுத்து 366 ரன்கள் பின்னிலையுடன் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 462 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் அபாரமாக ஆடிய சர்பராஸ் கான் 150 ரன்னிலும், ரிஷப் பண்ட் 99 ரன்னிலும் அவுட் ஆகினர்.

இதன் காரணமாக 107 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது 2வது இன்னிங்சை தொடங்கியது.  ஜஸ்ப்ரீத் பும்ரா 4 பந்துகள் வீசிய நிலையில், போதிய வெளிச்சமின்மை காரணமாக நேற்று 4ம் நாள் ஆட்டம் முடிக்கப்பட்டது.  5வது நாள் ஆட்டம் இன்று(20-10-2024) நடைபெற்றது .மழை காரணமாக ஆட்டம் தாமதமாக தொடங்கியது . தொடக்கத்தில் டாம் லாதம் ரன் எதுவும் எடுக்காமல் பும்ரா பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.  பின்னர் டெவான் கான்வே 17 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து வில் ய்ங் , ரச்சின் ரவீந்திரா இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடினர். இதனால், நியூசிலாந்து அணி 27.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்க்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.  இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. 2வது டெஸ்ட் வருகிற 26ம் தேதி தொடங்க உள்ளது. நியூசிலாந்து அணி 1988ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதில்லை. அந்த 36 ஆண்டுகால ஏக்கத்தை தீர்த்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்